பாதை காட்டுவார்
“பாதை காட்டுவார் | Paathai Kaattuvaar”
“திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து:
நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்;
அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்,
நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.
ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும்,
எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.”
பாதை காட்டுவார்
பாதை காட்டி வழி நடத்தி செல்வார்
1.செங்கடலில் பாதை இல்லை
யோர்தானில் வழியில்லை
பாதை ஒன்றும் புரியவில்லை
வாழ்க்கையிலே துளிர்வில்லை
பாதையிலே வளமில்லை
வாழவும் புரியவில்லை
சோர்ந்து போகாதே
சேனைகளின் யெகோவா உன் முன் செல்கிறார் (2)
2.கர்த்தர் செய்யும் இரட்சிப்பை பாருங்கள் என்றாரே
கர்த்தர் யுத்தம் செய்தாரே
இராமுழுதும் பலத்த கீழ்காற்றினாலே
ஜலம் பிரிந்து போயிற்றே
யுத்தம் செய்தாரே
முன்னும் பின்னும் எதிரி மாய்ந்து போனானே (2)
3.யோர்தானின் நடுவிலே தண்ணீர் இல்லா தரையிலே
கால் ஊன்றி நின்றார்களே
தண்ணீரற்ற உலர்ந்த தரை வழியாக
கடந்து போனார்களே
கர்த்தர் கரம் பலத்ததென்றறிவாயே (2)
